sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும்; ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

/

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும்; ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும்; ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும்; ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

3


ADDED : மார் 06, 2026 01:13 PM

Google News

3

ADDED : மார் 06, 2026 01:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: 'வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் பகுதியில் இடையூறு ஏற்படுத்துவது, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நேரடியாகப் பாதிக்கும்,' என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த கடல்சார் மாநாட்டில் அவர் பேசியதாவது; உலகில் உள்ள கடல்கள் தற்போது வெறும் வர்த்தகப் பாதைகளாக மட்டுமல்லாமல், அவை ராஜதந்திர அதிகார மையங்களாக மாறி விட்டன. சர்வதேச விதிகள் ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகின்றன. அதேபோல, புவிசார் அரசியல் கட்டமைப்புகள் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. பழங்கால சர்வதேச கட்டமைப்புகள் நிலைகுலைந்து வருவதால், ஒவ்வொரு நாடும் தங்களின் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

மேற்காசியாவில் நிலவும் தற்போதைய சூழல், உலகளாவிய ஸ்திரமற்ற தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அசாதாரணமானது. எனவே, அங்கு சூழல் எவ்வாறு மாறும் என்பதை கணிப்பது கடினம். வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் , சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய பகுதியாகும். தற்போது, அந்தப் பகுதியில் இடையூறு ஏற்படும் போது, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நேரடியாகப் பாதிக்கும்.

நிலம், நீர், வானம் மற்றும் விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் நாடுகளுக்கிடையே போட்டி அதிகரித்து வருவது கவலைக்குரியது. இந்த அசாதாரணமான சூழலே தற்போது இயல்பான ஒன்றாக மாறி வருவதுதான் மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது, எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us