குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
ADDED : மே 29, 2025 05:13 AM

புதுடில்லி: விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், 2025 - 26 சாகுபடி ஆண்டின் காரிப் பருவ தானியங்கள் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
நடப்பு சாகுபடி ஆண்டுக்கு, தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றுக்கான கொள்முதல் தொகுப்பாக 2.07 லட்சம் கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது
குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட, குறைந்தபட்சம் 50 சதவீத லாபம் கிடைக்கும்
நெல், சோளம், பருப்புகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உட்பட 14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது
கேழ்வரகு, பருத்தி ஆகியவற்றுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு ஒப்புதல்
இந்தியா முழுதுக்குமான சராசரி சாகுபடி செலவு அடிப்படையில், 1.50 மடங்காக ஆதரவு விலை நிர்ணயம்
காரிப் பருவம் - 14, ரபி பருவம் - 7, வணிக பயிர்கள் - 2 என, 23 பயிர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
அரிசி, கோதுமையை, உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய தொகுப்புக்காக அரசு கொள்முதல் செய்யும்.