தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பீஹாரின் கண்டக் நதியில் குறைந்தது நீர்மட்டம்

பீஹாரின் கண்டக் நதியில் குறைந்தது நீர்மட்டம்

பீஹாரின் கண்டக் நதியில் குறைந்தது நீர்மட்டம்


UPDATED : ஆக 27, 2026 10:56 PM

ADDED : ஆக 27, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 10:56 PM ADDED : ஆக 27, 2026 10:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்னா:நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கோஷி நதியில் ஆகஸ்ட் 26 ல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து எல்லையோர மாநிலங்களான பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேபாளத்தில் கோஷி என்ற பெயரில் ஓடும் இந்த நதி, பீஹாரில் கண்டக் நதியாக ஓடுகிறது.

நேபாளத்திலிருந்து பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர் கண்டக் நதியில் கலந்து தடுப்பணையை அடைந்ததால் நேற்று முன்தினம் பீஹாரில் தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேபாள எல்லையில் உள்ள பீஹாரின் மேற்கு சாம்ப்ரான் மாவட்டத்தின் வால்மீகி நகரில் உள்ள கண்டக் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு 1.50 லட்சம் கன அடியாக இருந்தது.

இது நேற்று காலை 1.04 லட்சம் கன அடியாக குறைந்துள்ளதாக பீஹார் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேபாளத்தின் தேவ்காட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக, கண்டக் நதியின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியதாகவும், ஆனால் நதிக்கரையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் நீர்வளத் துறையினர் வெள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில் கங்கை நதியிலும் நீர்மட்டம் குறைந்து வந்தாலும் சில இடங்களில் 1 முதல் 2 செ.மீ., அளவுக்கு நீர்மட்டம் உயரும் என்றும் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us