பிப்., 15ல் பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம் 16ல் தாக்கல் செய்கிறார் அமைச்சர் அதிஷி
பிப்., 15ல் பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம் 16ல் தாக்கல் செய்கிறார் அமைச்சர் அதிஷி
ADDED : ஜன 27, 2024 01:25 AM

புதுடில்லி:டில்லி சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 15ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து, டில்லி அரசின் நிதித்துறை அதிகாரி கூறியதாவது:
டில்லி அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 15 முதல் 20ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிப். 16ம் தேதி, 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அதிஷி சிங் தாக்கல் செய்வார். அதைத் தொடர்ந்து 20ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்கும்.
முதன்முறை
கடந்த ஆண்டு நிதித்துறையை ஏற்ற அமைச்சர் அதிஷி தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டை இந்த ஆண்டு தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கான கோப்பு, துணைநிலை கவர்னர் சக்சேனா ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஓர் சிறை
தலைநகர் டில்லியில் தற்போது திஹார், மண்டோலி மற்றும் ரோகிணி ஆகிய இடங்களில் சிறைகள் உள்ளன.
அதிக ஆபத்து நிறைந்த கைதிகளை அடைத்து வைக்க, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ளதைப் போல, செல்லுலர் சிறை ஒன்றை டில்லி நரேலாவில் கட்ட டில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக, 2024 - 20-25க்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சிறை கட்டுவதற்கு மத்திய அரசு ஏற்கனவே 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
அரை வட்ட வடிவில் கட்ட திட்டமிட்டுள்ள சிறையில், கலவரம் அல்லது கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டால் தானியங்கி பூட்டு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

