sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் சுற்றுப்பயணம்

/

ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் சுற்றுப்பயணம்


ADDED : நவ 02, 2024 04:16 PM

Google News

ADDED : நவ 02, 2024 04:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு (நவ.3 முதல் 8 வரை) 6 நாள் அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செல்கிறார்.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அமைச்சர் ஜெய்சங்கர் முதலில் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறார். பிரிஸ்பேன் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து கான்பெரா நகரில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்குடன் இணைந்து, 15-வது வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

அந்நாட்டு பார்லிமென்டில் உரையாற்றும் ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர், அந்நாட்டு அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

அதன்பிறகு 8-ந்தேதி சிங்கப்பூர் செல்லும் ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் 8வது ஆசியான் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அந்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்தியா- சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us