sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கனிமங்களை பரவலாக்குங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

/

 கனிமங்களை பரவலாக்குங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

 கனிமங்களை பரவலாக்குங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

 கனிமங்களை பரவலாக்குங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு


ADDED : பிப் 05, 2026 02:27 AM

Google News

ADDED : பிப் 05, 2026 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ''அரியவகை கனிமங்கள் சில குறிப்பிட்ட நாடுகளிடம் மட்டுமே குவிந்து கிடப்பது உலகத்துக்கே ஆபத்து,'' என நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

செமி-கண்டக்டர், நவீன ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க அரியவகை கனிமங்கள் அவசியம். இதற்கான சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வாஷிங்டனில் உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இதில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

அரியவகை கனிமங்கள் உலகம் முழுதும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சில நாடுகளிடம் மட்டுமே அவை குவிந்து கிடப்பது உலகத்துக்கே ஆபத்தாகிவிடும்.

தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைவது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

'தேசிய அரியவகை கனிமங்கள் திட்டம்' வாயிலாக அத்துறையில் நம் நாடு தற்சார்பு நிலையை எட்டி வருவதையும் இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

இந்த கூட்டத்திற்கு முன்பாக, கனடா வெளியுறவு துறை அமைச்சர் அனிதா ஆனந்த், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் பேசினார்.






      Dinamalar
      Follow us