sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

/

தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

8


ADDED : பிப் 16, 2026 10:06 PM

Google News

8

ADDED : பிப் 16, 2026 10:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை டில்லிக்கு மாற்ற வேண்டும் என பா.ஜ., நிர்வாகி கல்யாணராமன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த மனுவையும், அதனுடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழக அமைச்சர்கள் குறித்த மற்ற சொத்து குவிப்பு தொடர்பான பிரதான வழக்கோடு இணைத்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us