ADDED : ஜன 17, 2025 07:26 AM
பெலகாவி: கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். கடந்த 13ம் தேதி இரவு பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
பெலகாவி கிட்டூர் அருகே நடந்த விபத்தில், லட்சுமியின் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டுள்ளது. பெலகாவி டவுனில் உள்ள விஜயா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். லட்சுமியின் தம்பி சன்னராஜ் ஹட்டிகோளி தலையிலும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், லட்சுமிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ரவி பாட்டீல் நேற்று கூறுகையில், ''அமைச்சர் லட்சுமி உடல்நிலை தேறி வருகிறது. இன்னும் மூன்று நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். பின், அவருக்கு 10 நாட்கள் ஓய்வு அவசியம். மேல் சிகிச்சைக்காக அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நிறைய சத்தான உணவு மற்றும் பழங்களை சாப்பிட அறிவுறுத்தி உள்ளோம்,'' என்றார்.