அமைச்சர் லட்சுமி கார் விபத்து சந்தேகம் கிளப்பும் சலவாதி
அமைச்சர் லட்சுமி கார் விபத்து சந்தேகம் கிளப்பும் சலவாதி
ADDED : ஜன 22, 2025 11:32 PM

பெங்களூரு: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் கார் விபத்தில் சிக்கியதில் சந்தேகம் இருப்பதாக, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன். ஆனால் அவரது கார் விபத்தில் சிக்கியதில் சந்தேகம் உள்ளது.
போலீசார் வருவதற்கு முன்பு விபத்து நடந்த இடத்தில் இருந்து காரை கொண்டு சென்றது ஏன். காரை இப்போது ஏன் துணியால் மூடி வைத்துள்ளனர்?
காரில் கட்டு, கட்டாக பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக மக்கள் சொல்கின்றனர். நாய் குறுக்கே வந்ததால் விபத்து என்று முதலில் சொன்னார்கள். பின், லாரி மீது கார் மோதியது என்று கூறினர். டிரைவர் துாங்கி விட்டார் என்று சொல்கின்றனர்.
இப்படி மாற்றி, மாற்றி பேசும் போது சந்தேகம் வருகிறது. லட்சுமி ஏன் அரசு காரில் செல்லவில்லை? பாதுகாப்பு வாகனங்கள் ஏன் செல்லவில்லை? விபத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. இதற்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

