ADDED : மார் 20, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, விவசாய அமைச்சர் செலுவராயசாமி நேற்று திடீரென சந்தித்தார்.
கர்நாடகா விவசாய அமைச்சர் செலுவராயசாமி. பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள, முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டிற்கு, நேற்று காலை சென்றார். எடியூரப்பாவை சந்தித்து, அவரிடம் அரை மணி நேரத்திற்கு மேல், பேச்சு நடத்தினார். பின்னர் வெளியே வந்தவர், ஊடகத்தினரிடம் எதுவும் கூறாமல், காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார்.
அவர்கள் இருவரும் சந்தித்ததன் பின்னணி பற்றி, தகவல் வெளியாகவில்லை. சொந்த காரணங்களுக்காக சந்தித்து இருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், எடியூரப்பாவை, அமைச்சர் சந்தித்து இருப்பது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

