5 வயது சிறுமிக்கு தொல்லை போலீசாருக்கு அமைச்சர் உத்தரவு
5 வயது சிறுமிக்கு தொல்லை போலீசாருக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : ஜன 26, 2025 07:32 AM

உடுப்பி : உடுப்பியில் ௫ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடிக்க, போலீசாருக்கு மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர்லட்சுமி ஹெப்பால்கர்உத்தரவிட்டுள்ளார்.
உடுப்பியில், இம்மாதம் 23ம் தேதி, ௫ வயதுசிறுமிக்கு, 30 வயது நபர் சாக்லேட் வாங்கிக் கொடுத்து, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
சிறுமி கூச்சலிட்டதால், அப்பகுதியினர் அங்குவந்தனர். இதை பார்த்த அந்நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுதொடர்பாகபோலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இத்தகவல் பெலகாவி யில் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வரும், உடுப்பி மாவட்ட பொறுப்பு அமைச்சர்லட்சுமி ஹெப்பால்கரின் கவனத்துக்கு வந்தது.
உடனடியாக மாவட்ட கலெக்டர் வித்யா குமாரி, எஸ்.பி., அருணை தொடர்பு கொண்டு,விபரம் கேட்டறிந்தார்.
சம்பந்தப்பட்ட நபரை விரைவாக பிடிக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான உதவிகள் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், மாவட்ட போலீசார், குழந்தையிடம் தவறாக நடக்க முற்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்நபர் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள், 94808 05400, 94808 05430, 82779 88949 என்ற மொபைல் போன்;08202 525599 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

