சபரிமலை ரோடுகளை நவ.5க்குள் சீரமைக்க அமைச்சர் உத்தரவு
சபரிமலை ரோடுகளை நவ.5க்குள் சீரமைக்க அமைச்சர் உத்தரவு
ADDED : அக் 20, 2024 01:41 AM
மூணாறு:சபரிமலை பக்தர்கள் வசதிக்காக நவ.5 க்குள் ரோடுகளை சீரமைக்குமாறு கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் உத்தரவிட்டார்.
சபரிமலை சீசன் நெருங்குவதால் ஏற்பாடுகள் குறித்து முகம்மதுரியாஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுகாதாரதுறை அமைச்சர் வீணாஜார்ஜ், துணை சபாநாயகர் சிற்றயம் கோபகுமார், தலைமை கொறடா ஜெயராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
சபரிமலை பக்தர்கள் செல்லும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ரோடுகளை நவ.5 க்கு முன்பாக சீரமைக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.
மண்டல, மகர விளக்கு சீசனில் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடவடிக்கை குறித்து இந்த குழு ஆய்வு நடத்தி நவம்பர் முதல்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் தடையில்லா மின் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.