ADDED : மார் 16, 2024 11:00 PM

பெங்களூரு: ''பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது,'' என, அமைச்சர் சந்தோஷ் லாட் 'உருட்டி'யுள்ளார்.
தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட், பெங்களூரில் அளித்த பேட்டி:
மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு, மீண்டும் 'சீட்' கிடைக்காதது ஏன் என்று, எனக்கு தெரியவில்லை. அரசியலைத் தாண்டி, அவர், எனக்கு நல்ல நண்பர். அவருக்கு சீட் இல்லை என்று தெரிந்ததும் வருத்தப்பட்டேன்; அவருக்கு நல்லது நடக்கட்டும் என்று, கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
முதல்வர் சித்தராமையாவையும், அரசின் வாக்குறுதிகளையும் பிரதாப் சிம்ஹா தொடர்ந்து விமர்சித்து வந்தார். அவரை பற்றி ஏதாவது குறை கூறிக்கொண்டே இருந்தால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவர் அப்படி பேசி இருப்பார் என்று நினைக்கிறேன்.
அரசின் வாக்குறுதித் திட்டங்களை பற்றி, மக்களுக்கு தெரிவிக்க, கர்நாடகா அரசின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த, முதல்வருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

