உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
UPDATED : ஜூலை 12, 2011 08:58 AM
ADDED : ஜூலை 12, 2011 07:28 AM
புதுடில்லி: ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் கிடைக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் நாடு முழவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளியவர்கள் 75 சதவீதத்தினருக்கும், புற நகர் பகுதியில் உள்ள ஏழைகளுக்கும் மானிய விலையில் உணவு தானியம் கிடைக்கும். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அமைச்சரவைக்கூட்டம் மத்திய அமைச்சர் பிராணப்முகர்ஜி தலைமையில் நேற்று டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தினை வரும் மழைக்காலகூட்டத்தொடரில் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தஇதன்படி வறுமை கோட்டிற்கு கீ்ழ் உள்ளவர்களுக்கு மாதம் ஒன்றுக்குரூ.3-க்கு 7 கிலோ அரிசியும், ரூ. 2 -க்கு 1 கிலோ கோதுமையும் கிடைக்கும் என்றும், பொதுப்பிரிவினருக்கு மாதம் 3 அல்லது 4 கிலோ அரிசியும் கிடைக்கும் எனவும், விவசாயிகளின் உற்பத்தி நெல்லுக்கு குறைந்த ஆதரவு விலை கிடைக்க வகை செய்யப்படும் எனவும், இதனால் அரசு ரூ.ஆயிரத்து 300 கோடி செலவில் 51 மில்லியன் டன் அரிசியினை கொள்முதல் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

