ADDED : மார் 21, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகல்புர்: பீஹார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவுகாசியா அருகே உள்ள கிராமம் ஜகத்பூர். இப்பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் விஸ்வஜித் மற்றும் ஜெய்ஜித்.
இவர்கள் மத்திய உள்துறை இணையமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நித்யானந்த ராயின் மருமகன்கள்.
சகோதரர்கள் இடையே, குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக நேற்று வாய் தகராறு ஏற்பட்டது.
இது மோதலாக மாறி துப்பாக்கி சண்டையில் முடிந்தது.
அப்போது இருவரும் துப்பாக்கியால் மாறி, மாறி சுட்டதில் விஸ்வஜித் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது சகோதரர் ஜெய்ஜித்தும், சண்டையை விலக்க வந்த தாய் ஹீனா தேவியும் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கி சூடு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.