UPDATED : ஜன 02, 2025 03:52 PM
ADDED : ஜன 02, 2025 02:54 PM

புதுடில்லி: உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகருக்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', அர்ஜுனா உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும். நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கம்/கூட்டமைப்பு பரிந்துரை செய்து வருகிறது.
இதன்படி இந்தாண்டுக்கான கேல் ரத்னா பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
1. உலக செஸ் சாம்பியன் குகேஷ்
2 ஹாக்கி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் சிங்
3. பாரா தடகள வீரர் பிரவீன் குமார்
4. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகர்
ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருதுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அர்ஜூனா விருது
01.ஜோதி யாரார்ஜி (தடகளம்)
02.அன்னுராணி (தடகளம்)
03. நிட்டு(குத்துச்சண்டை)
04. சாவீட்டி(குத்துச்சண்டை)
05.வந்திகா அகர்வால்(செஸ்)
06.சலிமா டெட் (ஹாக்கி)
07.அபிஷேக் (ஹாக்கி)
08.சஞ்சய் (ஹாக்கி)
09.ஜர்மன்ப்ரீத் சிங் (ஹாக்கி)
10.சுக்ஜித் சிங்(ஹாக்கி)
11.ராகேஷ் குமார்(பாரா வில்வித்தை )
12. ப்ரீத்தி பால்(பாரா தடகளம்)
13.ஜீவன்ஜி தீப்தி (பாரா தடகளம்)
14.அஜித் சிங்(பாரா தடகளம்)
15.சச்சின் சர்கேராவ் (பாரா தடகளம்)
16. தரம்பீர்(பாரா தடகளம்)
17. பிரணவ் சூர்மா(பாரா தடகளம்)
18.ஹகாடோ சீமா(பாரா தடகளம்)
19. சிம்ரன்(பாரா தடகளம்)
20.நவ்தீப்(பாரா தடகளம்)
21.நிதேஷ் குமார் (பாராபாட்மின்டன் )
22.துளசிமதி முருகேசன்(பாராபாட்மின்டன் )
23.நித்யா ஸ்ரீ சுமதி சிவம்(பாராபாட்மின்டன் )
24.மணிஷா ராமதாஸ்(பாராபாட்மின்டன் )
25.கபில் பார்மர்(பாரா ஜூடோ )
26. மோனா அகர்வால் (பாரா துப்பாக்கிச்சுடுதல்)
27. ரூபினா பிரான்சிஸ்(பாரா தடகளம்)
28. ஸ்வப்னில் குசாலே(துப்பாக்கிச்சுடுதல்)
29.சரப்ஜித் சிங்துப்பாக்கிச்சுடுதல்
30. அபய் சிங்(ஸ்குவாஸ்)
31.சஜன் பிரகாஷ்நீச்சல் வீரர்
32. அமன்(மல்யுத்தம்)
வாழ்நாள் சாதனைக்கான அர்ஜூனா விருது
சுச்சா சிங்( தடகளம்)
முரளிகாந்த் ராஜாராம் பேட்கர்( பாரா நீச்சல்)
துரோணாச்சாரியார் விருது
01. சுபாஷ் ராணா( பாரா துப்பாக்கிச்சுடுதல்)
02. திபாலி தேஷ்பாண்டே( துப்பாக்கிச்சடுதுல்)
03. சந்தீப் கங்வன்( ஹாக்கி)
வாழ் நாள் சாதனைக்கான துரோணாச்சாரியார் விருது
முரளிதரன்(பாட்மின்டன்)
அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ(கால்பந்து)
வரும் 17 ம் தேதி காலை 11 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.