தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி


ADDED : நவ 29, 2024 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி, அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, 3,500 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்யப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், ஒட்டுமொத்த ராணுவ திறன்களை நம் நாடு மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு வரம்புகளை கொண்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10 நாட்களுக்கு முன், ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து, நீண்ட துார இலக்குகளை தாக்கும், 'ஹைப்பர்சானிக்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, அணுசக்தியில் இயங்கும் ஐ.என்.எஸ்., அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் திறன் உடைய, கே - 4 ஏவுகணை, நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள வங்கக் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதன் வாயிலாக, நிலம், ஆகாயம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணையை செலுத்தும் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., தொலைவு வரை சென்று தாக்கும் திறன் உடையது. இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us