29 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு
29 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு
UPDATED : ஜன 12, 2024 08:05 PM
ADDED : ஜன 12, 2024 07:46 PM

சென்னை: 8 ஆண்டுகளுக்கு முன் 29 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தின்
பாகங்கள் சென்னை கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்
வெளியாகியுள்ளது.
கடந்த
2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை
தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி இந்திய விமான படைக்கு
சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் விமான
ஊழியர்கள் 6 பேரும், விமானப்படை ஊழியர்கள் 11 பேரும், ராணுவ வீரர்கள் 2
பேரும், கடற்படை வீரர் ஒருவரும், கப்பல் மாலுமி ஒருவரும், கப்பல் படை
ஊழியர்கள் 8 பேரும் என மொத்தம் 29 பேர் பயணித்தனர்.
விமானம் புறப்பட்ட
சிறிது நேரத்திலேயே சென்னை அருகே வங்கக்கடல் பகுதியில் திடீரென மாயமானது.
அந்தவிமானத்தையும் அதில்
பயணித்தவர்களையும் தேடும் பணிகள் நடந்து வந்த நிலையில் இன்று சென்னையில்
இருந்து 310 கி.மீ. தொலைவில் வங்க கடல் பகுதியில் கடலில்
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

