தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காணாமல் போன சிறுவன் காட்டில் சடலமாக மீட்பு

காணாமல் போன சிறுவன் காட்டில் சடலமாக மீட்பு

காணாமல் போன சிறுவன் காட்டில் சடலமாக மீட்பு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 02:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 02:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: காணாமல் போன சிறுவன், ரத்தக்காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். இது கொலையா என்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுடில்லி, பாவானா பகுதியில் வசிப்பவர் அயூப். இவரது மகன் இன்ட்சார், 10. கடந்த, 4ம் தேதி காலை, 11:30 மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாக வீட்டுக்குள் வரவில்லை என்பதால், பெற்றோர் வெளியில் வந்து பார்த்தனர். அங்கு இன்ட்சாரை காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடினர். நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளிலும் விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நரேலா தொழிற்பேட்டை அருகே காட்டுப் பகுதியில், ஒரு சிறுவன் உடல் கிடப்பதாக, நேற்று முன் தினம் மாலை, 3:00 மணிக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்றனர். கைகள் மற்றும் கால்களில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது, இன்ட்சார் என்பது உறுதி செய்யப்பட்டது. உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

குற்றப்புலனாய்வு மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்தனர். உடலில் உள்ள காயங்களை தன்மைகளை பார்க்கும் போது, இன்ட்சார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்தப் பகுதி முழுதும் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us