ADDED : நவ 07, 2024 12:47 AM
பெங்களூரு : ''இடைத்தேர்தல் முடிந்தபின் ம.ஜ.த., கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவர்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி. பின், மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இடைத்தேர்தலுக்கு பின் ம.ஜ.த., கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவர். குமாரசாமி முதல்வராக இருந்தபோது ஒரு கோவில் கட்டியதில்லை. ஒருவருக்கும் நிலம் கொடுத்ததில்லை. ஏழைகளுக்கு வீடு வசதி ஏற்படுத்தி கொடுத்ததில்லை.
அவர் எந்த முகத்தை வைத்து கொண்டு ஓட்டு சேகரிக்க செல்கிறார் என்று தெரியவில்லை.முதல்வராக இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் என்று குமாரசாமி கூறுகிறார். அவரால் பயனடைந்த ஒரு விவசாயியை காட்டுங்கள் பார்க்கலாம். அதிகாரத்தில் இருந்தபோது அவர் என்ன செய்தார் என்று கூறட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.