மாண்டியா எம்.எல்.ஏ., மீது வழக்கு தொடர ம.ஜ.த., தயார்
மாண்டியா எம்.எல்.ஏ., மீது வழக்கு தொடர ம.ஜ.த., தயார்
ADDED : பிப் 27, 2024 06:20 AM

மாண்டியா : சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களை தங்கள் தலைவர்கள் மிரட்டுவதாகக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா மீது அவதுாறு வழக்கு தொடர ம.ஜ.த., தயாராகி வருகிறது.
'ராஜ்யசபா தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களை, ம.ஜ.த., தலைவர்கள் மிரட்டுகின்றனர்' என மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக மாண்டியாவின் கே.ஆர்.பேட்டையில் நேற்று ம.ஜ.த., முன்னாள் எம்.பி., புட்டராஜு கூறுகையில், ''ராஜ்யசபா தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களை, ம.ஜ.த., தலைவர்கள் மிரட்டுவதாக, பொய் புகார் கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா மீது இரண்டு நாட்களில் அவதுாறு வழக்கு தொடர்ந்து, நஷ்டஈடு கேட்கப்படும்.
''முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் தான், அவருக்கு எம்.எல்.ஏ., சீட் கிடைத்தது. தன் மதிப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
அவரின் வார்த்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
