sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ம.ஜ.த., குமாரசாமி செல்கிறார்... டில்லிக்கு! தொகுதி பங்கீடு இறுதி செய்கிறது பா.ஜ.,

/

ம.ஜ.த., குமாரசாமி செல்கிறார்... டில்லிக்கு! தொகுதி பங்கீடு இறுதி செய்கிறது பா.ஜ.,

ம.ஜ.த., குமாரசாமி செல்கிறார்... டில்லிக்கு! தொகுதி பங்கீடு இறுதி செய்கிறது பா.ஜ.,

ம.ஜ.த., குமாரசாமி செல்கிறார்... டில்லிக்கு! தொகுதி பங்கீடு இறுதி செய்கிறது பா.ஜ.,


ADDED : பிப் 17, 2024 11:37 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : டில்லி வரும்படி ம.ஜ.த., தலைவர் குமாரசாமிக்கு, பா.ஜ., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை, பா.ஜ., இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் கர்நாடகாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்தலுக்கான ஏற்பாடுகளை துவங்கி உள்ளனர். வேட்பாளர்கள் தேர்வு செய்யும் படலம் மும்முரமாக நடக்கிறது.

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெற, ஆளுங்கட்சியான காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

'பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.ஜ.த.,வும் இணைந்து உள்ளதால், லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்' என, கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பின்னர், ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து விவாதிக்க, முன்னாள் முதல்வர் குமாரசாமி, இரண்டு முறை டில்லிக்கு சென்று, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்தார். ஆனால் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை.

அமித் ஷா உத்தரவு

இதற்கிடையில் ஹாசன் தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில், ம.ஜ.த.,வின் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுவார் என, தேவகவுடா அறிவித்தார். இதற்கு மாநில பா.ஜ.,வில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுபோல மாண்டியா தொகுதியில் போட்டியிட ம.ஜ.த., ஆசைப்படுகிறது. ஆனால் அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி., சுமலதா, பா.ஜ., 'சீட்' எதிர்பார்க்கிறார்.

'மாண்டியா, ஹாசனை ம.ஜ.த.,வுக்கு தரக் கூடாது' என, பா.ஜ.,வில் ஒரு கோஷ்டி கூறுகிறது. சமீபத்தில் கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்ட பா.ஜ., தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

'நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்' என, அவர் உத்தரவிட்டுச் சென்றிருந்தார். ம.ஜ.த.,வுக்கு, பா.ஜ., ஒதுக்கும் தொகுதிகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து, கர்நாடகா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

ஆறு தொகுதிகள்

இந்நிலையில் குமாரசாமியின் மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான நிகில் அளித்த பேட்டி:

தொகுதி பங்கீடு குறித்து பேச, டில்லி வரும்படி குமாரசாமிக்கு, பா.ஜ., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்த பின்னர் 28 தொகுதிகளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிடும். மாண்டியாவில் போட்டியிட வேண்டும் என, எனக்கு அழுத்தம் வருகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் போட்டியிட்ட எனக்கு, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்தது. பழைய மைசூரில் வெற்றி பெறுவது குறித்து, தலைவர்களுடன் ஆலோசனை நடததுகிறேன். விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டில்லி செல்லும் குமாரசாமி, பா.ஜ., மேலிட தலைவர்களிடம், ம.ஜ.த.,வுக்கு மாண்டியா, ஹாசன், துமகூரு, கோலார், பெங்களூரு வடக்கு, சிக்கபல்லாப்பூர் ஆகிய ஆறு தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்க உள்ளார்.

ஆனால் மூன்று முதல் நான்கு தொகுதிகளில் தான், ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டால், இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ, பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது.

குமாரசாமி டில்லிக்குச் சென்று, தொகுதி பங்கீடு பற்றி பேச இருப்பதால், ம.ஜ.த., தொண்டர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

'எப்படியாவது ஆறு தொகுதிகளை கேட்டு வாங்கி விடுங்கள். சட்டசபை தேர்தலில் நாம் அடைந்த தோல்விக்கு, வட்டியும், முதலுமாக காங்கிரஸுக்கு திருப்பி அளிக்க வேண்டும்' என, அவர்கள் கூறி உள்ளனர்.

குமாரசாமியும் பழைய மைசூரு பகுதி, ம.ஜ.த., தலைவர்களுடன் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us