ADDED : டிச 26, 2024 06:36 AM

பெலகாவி: பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கானாபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் நாயக் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை ஆபாசமாக திட்டியதாக, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை கானாபுரா போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது பா.ஜ., தலைவர்களை போலீஸ் நிலையத்திற்குள் நுழையவிட்டு, ரவியுடன் ஆலோசனை நடத்த அனுமதி அளித்ததாக, இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் நாயக் மீது குற்றம் சாட்டப்பட்டது. துணை முதல்வர் சிவகுமாரும், மஞ்சுநாத் நடவடிக்கை சரியில்லை என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து, ஐ.ஜி., விகாஸ்குமார் நேற்று உத்தரவிட்டார். இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசை கண்டித்து போராட்டம் நடத்த, பா.ஜ., சில அமைப்புகள் இன்று கானாபுராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

