சபரிமலை பாதைகளில் மொபைல் கழிவறை சுகாதார சீர்கேட்டை தடுக்க திட்டம்
சபரிமலை பாதைகளில் மொபைல் கழிவறை சுகாதார சீர்கேட்டை தடுக்க திட்டம்
ADDED : டிச 11, 2024 02:53 AM
சபரிமலை:சபரிமலை பாதைகளில் திரவ கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மொபைல் கழிவறைகள் அமைக்கப்படுகிறது.
அம்ருத் மிஷன் என்ற புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான சிறப்பு திட்டத்தின் கீழ் சபரிமலை பாதைகளில் மொபைல் கழிவறைகள் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக பக்தர்கள் அதிகமாக தங்குமிடங்களான பம்பை, நிலக்கல், எருமேலி போன்ற இடங்களில் இவை அமைக்கப்படுகிறது. இந்த கழிவறைகளில் திட மற்றும் திரவ கழிவுகளைஅழிக்கும் யூனிட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சபரிமலை பாதைகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வாஷ் இன்ஸ்டிடியூட்டும், அம்ருத் கேரள மண்டலமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனை நேற்று திருவனந்தபுரத்தில் அமைச்சர் எம். . ராஜேஷ் கொடியசைத்துதொடக்கி வைத்தார்.
பம்பையில் நேற்று முன்தினம் இரவு புலி வந்தது. தேவசம் விருந்தினர் மாளிகையின் பின்புறம் ஒரு காட்டுப் பன்றியை அது கொன்று தின்றுள்ளது. அது போல பம்பையில் இளநீர் விற்கும் பகுதியில் ராஜ வெம்பாலா வகை பெரிய பாம்பு வந்தது. வனத்துறையின் பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் அதனை பிடித்துச்சென்றனர்.