குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
ADDED : நவ 15, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: குஜராத்தின் வடக்கு மாவட்டங்களில் இன்று (நவ. 15) இரவு 10:15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தின் வடக்கே பதான், பானஸ்கந்தா, ஆகிய மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் உணரப் பட்டது. குஜராத்தின் மகேஷானா என்ற இடத்தில் மையமாக கொண்டு உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. உயிர்சேதம் குறித்த தகவல் இல்லை.