உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 03, 2026 01:02 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நேற்று அதிகாலை, 5:35 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. பாராமுல்லா மாவட்டத்தின் குல்மார்க்கின் வடகிழக்கே பட்டன் பகுதியை மையமாக வைத்து, 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.
நில நடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. மேஜை, நாற்காலிகள் ஆடின. துாங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
ஸ்ரீநகர், பாராமுல்லா, சோபூர், காண்டர்பால், புல்வாமா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
