பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவது அரசின் கடமை: பிரதமர் மோடி
பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவது அரசின் கடமை: பிரதமர் மோடி
UPDATED : பிப் 15, 2026 07:15 PM
ADDED : பிப் 15, 2026 07:13 PM

புதுடில்லி: தற்போதைய யதார்த்தங்களுக்கு ஏற்ப பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்குவது அரசின் கடமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிடிஐக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தியாவின் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது.
மக்கள், ஆன்லைன் வழியாக பணத்தை பரிவர்த்தனை செய்கிறார்கள். அடிப்படை சீர்திருத்தங்களால் ,உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முன்னணியில் உள்ளது. அடுத்த கட்ட பொருளாதார மாற்றத்திற்கு தனியார் துறை முக்கியமானது. நாட்டின் பாதுகாப்புப் படைகளை ஆதரிப்பதற்கும் அவற்றை வலுப்படுத்துவதற்கும் என்ன தேவையோ அதை அரசு செய்யும். தன்னிறைவு
பிரான்சில் இருந்து 114 ரபேல் ஜெட் விமானங்களை வாங்க முடிவு செய்த போதிலும், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவுக்காக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா எல்லா நேரங்களிலும் வலுவாகவும் தயாராகவும் இருக்க வேண்டும், அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். சிறு, குறு நிறுவனங்கள் சிறப்பான நிலையில் இருப்பதால் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு பேச்சு நடத்த உதவுகிறது.
தனியார் துறை
அரசியல் ஸ்திரத்தன்மை இந்தியாவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தன. தற்போதைய யதார்த்தங்களுக்கு ஏற்ப பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்குவது அரசின் கடமை. தரவு மையங்கள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

