sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டி-ஜிட்டல் கைது என மிரட்டும் மோசடி நபர்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி 'அட்வைஸ்' * மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி அறிவுரை

/

டி-ஜிட்டல் கைது என மிரட்டும் மோசடி நபர்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி 'அட்வைஸ்' * மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி அறிவுரை

டி-ஜிட்டல் கைது என மிரட்டும் மோசடி நபர்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி 'அட்வைஸ்' * மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி அறிவுரை

டி-ஜிட்டல் கைது என மிரட்டும் மோசடி நபர்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி 'அட்வைஸ்' * மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி அறிவுரை

1


ADDED : அக் 27, 2024 11:26 PM

Google News

ADDED : அக் 27, 2024 11:26 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: “தற்போது நடந்து வரும் டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற எந்த ஒரு நடைமுறையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுகாரர்களிடம் இருந்து தப்பிக்க, நிதானிக்கவும், சிந்திக்கவும், பிறகு செயல்படவும்,” என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறினார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி நேற்று ஒலிபரப்பான ரேடியோ நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

மக்களிடையே ஒரு முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, பலரும் என்னிடம் கேட்டனர். அதாவது, டிஜிட்டல் கைது என்ற மோசடி குறித்தே அவர்கள் கூறினர்.

மொபைல் போன்களில், வீடியோ அழைப்பு வாயிலாக அழைத்து உங்கள் மீது புகார் உள்ளது; வழக்கு உள்ளது. உங்களை கைது செய்யப் போகிறோம் என்று மிரட்டுவர்.

சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி, போலீஸ் அதிகாரி என்று கூறி, உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போவதாக கூறுவர்.

இந்த மோசடிகாரர்கள், உங்களை பற்றிய முழு விபரங்களை சேகரித்து வைத்திருப்பர்.

அதை பயன்படுத்தி, உங்களை மிரட்டி பார்ப்பர். இந்த நேரத்தில்தான், மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

டிஜிட்டல் கைது என்ற ஒரு நடைமுறையே கிடையாது. அதுபோல, ஆன்லைன் வாயிலாகவோ, மொபைல்போன் வாயிலாகவோ எந்த அமைப்பும் விசாரணை நடத்தாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் நிதானிக்கவும், சிந்திக்கவும், செயல்படவும் என்ற மூன்று முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.

அதாவது உங்களுடைய தகவல்களை கூறி உங்களை மிரட்டும்போது, பதற்றம்அடையாமல் நிதானமாக இருக்க வேண்டும். அந்த அழைப்பை பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய ஆதார் உள்ளிட்ட தகவல்களை கேட்டால், வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யக் கூறினால், நன்றாக சிந்தித்து, மோசடிகாரர்களின் வலையில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதன்பின், இந்த சம்பவம் தொடர்பாக உங்களுடைய குடும்பத்தார், நண்பர்களிடம் தெரிவியுங்கள். போலீசில் புகார் கொடுக்கவும்.

இது போன்ற மோசடி கும்பல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சைபர் குற்றங்கள் தொடர்பான இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனிமேஷனில் புதிய வரலாறு!

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:அனிமேஷன் துறையில் இந்தியா புதிய வரலாற்றை படைத்து வருகிறது. சோட்டா பீம், ஹனுமான், மோட்டு - பத்லு என, நம் நாட்டில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் கதாபாத்திரங்கள், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.மொபைல் போன் கேமிங் எனப்படும் மொபைல் போன்களுக்கான விளையாட்டுகளை உருவாக்குவதிலும், உலகின் மிகப்பெரும் மையமாக இந்தியா உள்ளது.இது, நம் இளைஞர்களின் கற்பனைத் திறன், கதை சொல்லும் திறன் உள்ளிட்டவற்றுக்கு சான்றாகும். இந்தத் துறையில் மிகப் பெரிய வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us