மத்திய - மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்பட கவர்னர்களுக்கு மோடி அறிவுரை
மத்திய - மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்பட கவர்னர்களுக்கு மோடி அறிவுரை
ADDED : ஆக 03, 2024 12:05 AM

புதுடில்லி; மாநில கவர்னர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மாநில கவர்னர்கள் பங்கேற்ற இரு நாள் மாநாடு துவங்கியது.இதில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியது,
ஒவ்வொரு மாநில கவர்னர்களும் மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். மேலும் மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் இடையே பயனுள்ள பாலமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்சு பேசியதாவது,
இந்த மாநாட்டில் மத்திய-மாநில உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் பரந்த அளவிலான பிரச்சினைகளை விவாதிக்கும்.
இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களிலிருந்து நமது சிந்தனையில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. .இவ்வாறு பேசினார்.