UPDATED : ஆக 08, 2024 09:04 PM
ADDED : ஆக 08, 2024 07:43 PM

புதுடில்லி: ஒலிம்பிக்ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜனாதிபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று நடந்த ஆடவர் ஹாக்கியில் இந்தியா, ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது.
இதை தொடர்ந்து வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜனாதிபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மோடி
மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என்றார்.
அமித்ஷா
மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல் திறன் விளையாட்டின் மீது புது ஆர்வத்தை தூண்டும் என்றார்.
ஜனாதிபதி முர்மு
ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை,ஒற்றுமை இளைஞர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் வாழ்த்து
ராகுல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் அற்புதமான போட்டி. நீங்கள் அனைவரும் வெண்கலப்பதக்கம் வென்றதைக் கண்டு பெருமைப்படுகிறேன். ஸ்ரீஜேஷூக்கு நன்றி. உங்களின் சிறப்பான, இடைவிடாத அர்ப்பணிப்பு எங்களை ஊக்கப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் பா.ஜ., செயல் தலைவர் நட்டா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.