UPDATED : பிப் 16, 2024 09:44 PM
ADDED : பிப் 16, 2024 08:46 PM

ராஜ்கோட்: டெஸ்ட் அரங்கில் 500 வது விக்கெட் சாய்த்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது.இன்று (17-ம் தேதி) நடந்த போட்டியில் டெஸ்ட் அரங்கில் அஸ்வின் தனது 500 வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.
* கும்ளேவுக்கு (619 விக்.,) அடுத்து இந்த இலக்கை அடைந்த இரண்டாவது இந்திய பவுலர் என அஸ்வின் பெருமை பெற்றார்.
அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி தனது ‛‛எக்ஸ்' தளத்தில் கூறியதுள்ளதாவது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் மகத்தான சாதனையை எட்டியுள்ளார். அவரது திறமைக்கும் விடா முயற்சிக்கும் இது சான்று, அஸ்வினுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு மோடி வலைதளத்தில் வாழ்த்தியுள்ளார்.