ADDED : ஜன 08, 2024 09:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள ஷேக் ஹசீனாவுக்கு தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், நேற்று நடந்த பொதுத்தேர்தலில், ஆவாமி லீக் கட்சி 3ல் 2 பங்கு இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இக்கட்சி தலைவரும் தற்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராகிறார்.முக்கிய எதிர்க்கட்சியான, வங்கதேசம் தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில், ஓட்டுப் பதிவு மிகவும் மந்தமாகவே நடந்தது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக்ஹசீனாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதில் தங்களின் வரலாற்று சிறப்புமிக்க தொடர்ச்சியான வெற்றியால் இந்தியாவுடனான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்றார்.