யாரும் செய்யாததை செய்து காட்டியவர் மோடி; அமித் ஷா புகழாரம்
யாரும் செய்யாததை செய்து காட்டியவர் மோடி; அமித் ஷா புகழாரம்
ADDED : ஏப் 13, 2025 09:56 PM

போபால்: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியவர் பிரதமர் மோடி என்று மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் இந்திய அளவில் சரிசமமற்ற நிலையில் இருப்பதை பார்க்க முடியும். சில மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி வேகமாக உள்ளது. சில மாநிலங்களில் அரசுமயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில மாநிலங்களில் அழிக்கப்பட்டு விட்டது.
இதற்கு காரணம் தேவையான சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாததுதான். கூட்டுறவு சங்கங்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்காததால், அந்த எண்ணம் எழவில்லை.
ஆனால், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கினார். அதற்கு முதல் அமைச்சராக என்னை நியமித்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளால், இந்த அமைச்சகத்தில் பிரதமர் மோடி பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
கூட்டுறவு சங்கம் தொடர்பாக அமைச்சகத்தால் பல துணை சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சட்டங்களை ஏற்றுக் கொண்ட மாநிலங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு கூறினார்.