ADDED : மார் 04, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பொது மக்களிடம் நன்கொடை திரட்டும் பணியில் பா.ஜ., ஈடுபட்டுஉள்ளது.
அந்த வகையில், பிரதமர் மோடி தன் பங்காக 2,000 ரூபாயை நேற்று நன்கொடையாக வழங்கினார்.
அதற்கான ரசீதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, 'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பா.ஜ.,வுக்கு என் பங்களிப்பை வழங்கி, அதன் முயற்சிகளுக்கு பலம் சேர்த்துஉள்ளேன்.
அனைவரும் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க, நமோ செயலி வழியாக நன்கொடை வழங்க வலியுறுத்துகிறேன்' என கூறியுள்ளார்.
இதையடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த பலரும் நன்கொடை வழங்கி, தங்களது ரசீதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

