2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் புறப்பட்டார் பிரதமர்!
2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் புறப்பட்டார் பிரதமர்!
ADDED : மார் 11, 2025 08:12 AM

புதுடில்லி: பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மொரீசியஸ் நாட்டின் 57வது தேசிய தின கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றார். இது குறித்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நாளை முதல் நான் மொரீசியஸ் நாட்டுக்கு 2 நாள் பயணமாக செல்கிறேன். 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறேன். எனது நண்பரும், பிரதமருமான டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்கு வசிக்கும் இந்திய மக்களுடன் உரையாட மிகவும் ஆவலாக உள்ளேன்.
மொரீசியஸ் நாடு நம்முடன் கடல்சார் துறையில் நெருங்கிய கூட்டாளி. நாம் ஆழமான கலாசார உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம். எனது வருகை இந்தியா-மொரீசியஸ் நாடுகள் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.