sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மோடி அரசின் 10 ஆண்டு சாதனை... பட்டியல்! புதிய பார்லி.,யில் ஜனாதிபதி உரை

/

மோடி அரசின் 10 ஆண்டு சாதனை... பட்டியல்! புதிய பார்லி.,யில் ஜனாதிபதி உரை

மோடி அரசின் 10 ஆண்டு சாதனை... பட்டியல்! புதிய பார்லி.,யில் ஜனாதிபதி உரை

மோடி அரசின் 10 ஆண்டு சாதனை... பட்டியல்! புதிய பார்லி.,யில் ஜனாதிபதி உரை


ADDED : பிப் 01, 2024 12:57 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'புதுடில்லி 'பொருளாதார முன்னேற்றம், பயங்கரவாதத்துக்கு எதிரான கடும் நடவடிக்கை, மகளிர் மசோதா, ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வறுமை ஒழிப்பு என, கடந்த, 10 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனை பட்டியல் மிக நீளமானது. இதில் முத்தாப்பாய், பல நுாற்றாண்டு காத்திருப்புக்குப் பின், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பார்லிமென்டில் நடத்திய உரையில் தெரிவித்தார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதியின் உரையுடன் துவங்கியது. புதிய பார்லிமென்டில், தன் முதல் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்த்தினார்.

லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த, 10 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை அவர் தன் உரையில் பட்டியலிட்டார். பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பேசியதாவது:

நடவடிக்கை


கடந்த, 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சீரிய நடவடிக்கைகளால், உடைந்துவிடக் கூடிய ஐந்து பொருளாதாரங்களில் இருந்த நம் நாடு, உலகின் மிகப் பெரும் ஐந்து பொருளாதார நாடுகள் பட்டியலில் சேர்ந்துள்ளது.

கடந்த, 10 ஆண்டுகளில், பல பெரும் சாதனைகள், தேசிய நலனில் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பல நுாற்றாண்டுகளாக மக்கள் காத்திருந்த தருணம் நினைவானதையும் சந்தித்தோம்.

கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.

கோவில் திறக்கப்பட்ட, ஐந்து நாட்களில், 13 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதுவே, இதற்கு அத்தாட்சியாகும்.

ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, பல கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவையெல்லாம் தற்போது வரலாறாக மாறிவிட்டது. முத்தலாக் தடையை இந்த பார்லிமென்ட் நிறைவேற்றியது மற்றொரு பெரும் சாதனையாகும்.

அதுபோல, லோக்சபா மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை, ஒருமனதாக நிறைவேற்றியதற்காக, இந்த பார்லிமென்டுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்.

பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு நோக்கங்களை தடுத்து நிறுத்தியதுடன், எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமானது. பல ஆண்டுகளுக்கு முன்பே இவை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பெண்களின் பங்களிப்பு


இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய பிரிவினரே, நாட்டின் வளர்ச்சிக்கான துாண் என்ற கோட்பாட்டுடன் இந்த அரசு செயல்படுகிறது. பெண்களின் வளர்ச்சிக்காக, நாட்டின் வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சந்திரயான் -- 3, ஆதித்யா விண்கலங்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, விண்வெளி துறையில் பெரும் சாதனை படைக்கப்பட்டது.

விளையாட்டு துறை என, அனைத்து துறைகளிலும், உலக நாடுகளுக்கு கடும் போட்டியை நம் நாடு கொடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதியின் மிகவும் விரிவான மற்றும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய உரை, 140 கோடி மக்களின் ஒன்றுபட்ட வலிமையை பறைசாற்றுவதாக உள்ளது. நம் நாடு புரிந்த சாதனைகளை தெரிவித்ததுடன், எதிர்கால தொலைநோக்கு பார்வையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நரேந்திர மோடி

பிரதமர்

பறைசாற்றப்பட்டது!



செங்கோல் பேரணி

புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்பட்டபோது, தமிழகத்தின் சோழர் ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட, தங்கத்திலான செங்கோல் நிறுவப்பட்டது.கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற, ஜனாதிபதி திரவுபதி முர்மு, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டில் வந்தார். அவரை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர். லோக்சபா அரங்குக்குள் ஜனாதிபதி நுழைந்ததும், லோக்சபாவின் மூத்த மார்ஷலான ராஜிவ் சர்மா, பாரம்பரிய உடையணிந்து, செங்கோலை கையில் ஏந்தி, பேரணியாக வந்தார். அவரைப் பின்தொடர்ந்து, ஜனாதிபதி சபைக்குள் நுழைந்தார். மேளங்கள் ஒலிக்க, செங்கோல் பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டது.



பார்லிமென்ட் துளிகள்!

* கடந்த கூட்டத் தொடரின்போது, பார்வையாளர் மாடத்தில் இருந்து இருவர், லோக்சபாவுக்குள் குதித்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக, பார்வையாளர் மாடத்தின் முதல் வரிசை இருக்கைகள் நீக்கப்பட்டன* பிரிட்டன், நேபாளம், பிரேசில், மாலத்தீவுகள் உள்பட, 58 நாடுகளின் தூதர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்* ஜனாதிபதி, 75 நிமிடங்கள் நிகழ்த்திய உரையின்போது, ஆளும் தரப்பினர், மேஜைகளை தட்டி பாராட்டினர். குறிப்பாக, ராமர் கோவில் குறித்து பேசியபோது, அது நீண்ட நேரம் நீடித்தது* ஜனாதிபதி உள்ளிட்டோர் சபைக்குள் நுழைந்தபோது, 'பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீ ராம்' என, உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்* முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, மன்மோகன் சிங்குக்காக தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தேவ கவுடா கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். மன்மோகன் சிங் சபைக்கு வரவில்லை* காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவர் சோனியா முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோரும் முதல் வரிசையில் இருந்தனர்.








      Dinamalar
      Follow us