தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஜெர்மனி பிரதமருடன் மோடி ஆலோசனை

ஜெர்மனி பிரதமருடன் மோடி ஆலோசனை

ஜெர்மனி பிரதமருடன் மோடி ஆலோசனை


ADDED : நவ 24, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் இன்று (நவ.,24) தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகள் இடையிலான ராணுவம், வர்த்தகம் மற்றும் உயர் தொழில்நுட்ப உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவும் ஜெர்மனியும் தங்களின் துாதரக உறவுகளின், 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் இந்த உரையாடல் நடந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக தலைவர்கள் இன்று பேச்சு நடத்தினர். குறிப்பாக, ராணுவம், வர்த்தகம், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க செய்யவும் உறுதி பூண்டனர்.

இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்தாக உள்ள நிலையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுப்படுத்துவதற்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்ட இரு தலைவர்களும், உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி கூறுகையில், ‘ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸுடன் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டேன். ராணுவம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசித்தோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us