UPDATED : செப் 29, 2024 09:48 PM
ADDED : செப் 29, 2024 09:40 PM

புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்த கார்கே உடல் நலம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசரித்தார் பிரதமர் மோடி.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி மூன்றாம் கட்ட ஒட்டுப்பதிவு வரும் அக.01-ல் நடக்கிறது. இங்கு கதுவா மாவட்டத்தில் காங்.வேட்பாளர்களை ஆதரித்து காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் செய்தார். அப்போது பிரசார மேடையில் திடீரென மயங்கி விழுந்தார்.
இது குறித்து தகவலறிந்து பதறிப்போன பிரதமர் மோடி, உடனே தொலைபேசி வாயிலாக கார்கேயை தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது மோடியை பிரதமர் நாற்காலியிலிருந்து அகற்றும் வரை சாகமாட்டேன் என ஆவேசமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பேசிய பின்னர் தான் தான் மயங்கி விழுந்தார் கார்கே.
தன்னை விமர்சித்தாலும் அரசியல் நாகரீகம் கருதியும், எதிர்கட்சி தலைவர் என்ற முறையிலும் கார்கேயின் உடல் நலம் குறித்து விசாரித்தார் மோடி.