பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் மோடி
ADDED : ஜூன் 27, 2025 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் ஜூலை முதல் வாரம் பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி.
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வரும் ஜூலை 06 , 07-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடான இந்தியா பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதை ஏற்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
இத்துடன் கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா என மேலும் 4 நாடுகளுக்கு மோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரிக்ஸ் மாநாட்டின் பிரேசில் அதிபர், மற்றும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.