மோடி தலைமையில் அமைதி நடவடிக்கைகள்: மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் உறுதி
மோடி தலைமையில் அமைதி நடவடிக்கைகள்: மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் உறுதி
ADDED : ஜூலை 10, 2024 05:52 PM

இம்பால்: 'மணிப்பூரில் அமைதியை உருவாக்க, மோடி தலைமையிலான ஆட்சியில் மெய்டி மற்றும் கூகி சமூக மக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் ஓராண்டுகளுக்கு மேல், வன்முறை நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடி ஏன் நேரில் செல்லவில்லை? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் பைரேன் சிங் அளித்த பதில்: மணிப்பூருக்கு பிரதமர் மோடி வருவாரா அல்லது வர மாட்டாரா என்ற கேள்விக்கே இடமில்லை. அமைதியை உருவாக்க, மோடி தலைமையிலான ஆட்சியில் மெய்டி மற்றும் கூகி சமூக மக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இங்கு அமைதியை ஏற்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். நாங்கள் முயற்சித்து வருகிறோம். நீண்ட காலமாக இங்கு அமைதி நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.