ஹரியானா தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென பேச்சை நிறுத்திய மோடி: ஏன் ?
ஹரியானா தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென பேச்சை நிறுத்திய மோடி: ஏன் ?
ADDED : செப் 25, 2024 09:28 PM

குர்கான்: ஹரியானாவில் பா.ஜ.,தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின் போது இளைஞர் ஒருவர் மீது பிரதமர் மோடி கரிசனம் காட்டிய சம்பவம் நடந்தது.
90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக். 01 ல் தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வியூகம் வகுத்து வருகிறது. இதையடுத்து இங்கு பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய வந்தார் பிரதமர் மோடி.
சோனாபட்டில் இன்று( செப்.,25) நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி கொண்டிருந்த பிரதமர் மோடி திடீரென பேச்சை நிறுத்தினார்.
அப்போது பொதுகூட்டத்தில் இளைஞர் ஒருவர் மோடியின் படத்துடன் கூடிய பதாகையை கையில் ஏந்தி நீண்ட நேரம் நின்று கொண்டே மோடியின் பேச்சை கேட்டு கொண்டிருந்ததார். அதை கவனித்த மோடி இளைஞனிடம் நீ வைத்திருக்கும் படம் மிகவும் அழகாக உள்ளது. இப்படி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் நீ சோர்வடைவாய். தயவு செய்து அமரவும் என்றார்.
நீ வைத்திருக்கும் பதாகை பின்பக்கம் உனது பெயர் , முகவரியை எழுதி கொடு. உனக்கு கடிதம் அனுப்புகிறேன் என கூறி இளைஞனிடமிருந்து பதாகையை வாங்கி வருமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மோடியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.