ஜி7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி
ஜி7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி
ADDED : ஏப் 26, 2024 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனக்கு அழைப்பு விடுத்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
வரும் ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் ஜி7 உறுப்பு நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலியில் நடக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக இத்தாலி பிரதமரிடம் உரையாற்றினார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம்,ஒத்துழைப்பு குறித்தும், மாநாட்டின் பங்கேற்க வருமாறு அழைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

