இந்தியா வந்தார் கத்தார் அரசு தலைவர்;விமான நிலையத்தில் வரவேற்றார் மோடி
இந்தியா வந்தார் கத்தார் அரசு தலைவர்;விமான நிலையத்தில் வரவேற்றார் மோடி
ADDED : பிப் 17, 2025 09:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியா வந்த கத்தார் நாட்டின் அரசு தலைவரை பிரதமர் மோடி, விமான நிலையத்தில் சென்று வரவேற்றார்.
வளைகுடா நாடான கத்தார், எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு வளம் கொண்ட கத்தார், சர்வதேச புவி அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
அந்த நாட்டின் அரசு தலைவரான (அமீர்), ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி, இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவரை, பிரதமர் மோடி, டில்லி விமான நிலையத்தில் சென்று நேரில் வரவேற்றார்.
இந்திய பயணத்தின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் கத்தார் அரசு தலைவர் பேச்சு நடத்துகிறார்.