UPDATED : மே 07, 2024 01:34 AM
ADDED : மே 06, 2024 07:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: லோக்சபா தேர்தலில் மூன்றாம் கட்டமாக இன்று (மே.07) நடைபெற உள்ள தேர்தலில் குஜராத்தில் ஆமதாபாத்தில் ஓட்டளிக்க குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி.
ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்டமாக இன்று, 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு ஒட்டுப்பதிவு நடைபெறுகிறது.
இதில் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்கிறார். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் சூரத் தொகுதிக்கு போட்டியின்றி ஒருவர் எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.