sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடலில் மூழ்கிய பண்டைய துவாரகாவில் வழிபட்டார் மோடி

/

கடலில் மூழ்கிய பண்டைய துவாரகாவில் வழிபட்டார் மோடி

கடலில் மூழ்கிய பண்டைய துவாரகாவில் வழிபட்டார் மோடி

கடலில் மூழ்கிய பண்டைய துவாரகாவில் வழிபட்டார் மோடி


ADDED : பிப் 26, 2024 01:38 AM

Google News

ADDED : பிப் 26, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவபூமி துவாரகா : குஜராத்தின் பேட் துவாரகா தீவுக்கு அருகே கடலில் மூழ்கியுள்ள பண்டைய துவாரகா நகரில், பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்; 'ஸ்கூபா டைவிங்' எனப்படும் ஆழ்கடலில் நீச்சலடித்து பிரார்த்தனை செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தேவபூமி துவாரகா மாவட்டத்தில், துவாரகா நகருக்கு அருகில் அமைந்துள்ள பேட் துவாரகா தீவுக்கு அருகே, கடலில் மூழ்கியுள்ள பண்டைய துவாரகா நகருக்கு சென்றார்.

தெய்வீக அனுபவம்

இதற்காக, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சலடித்து, கடற்படை ஆழ்கடல் வீரர்கள் உதவியுடன் சென்றார். ஸ்கூபா டைவிங் செய்வதற்கான ஹெல்மெட் அணிந்தார். காவி நிறத்தில் பாரம்பரிய உடையுடன் இருந்த அவர், கடலுக்குள் மூழ்கிய நகரில் சம்மணமிட்டு பிரார்த்தனை செய்தார்.

மேலும், கையில் எடுத்துச் சென்ற மயிலிறகை காணிக்கையாகச் செலுத்தினார். சிறிது நேரம் அங்கு தியானத்தில் இருந்த அவர், பண்டைய துவாரகா நகரின் பகுதிகளை பார்த்தார்.

ஹிந்து கடவுள் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகா நகரம், மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகக் கருதப்படுகிறது. கட்டடக் கலைக்கான கடவுளாகக் கருதப்படும் விஸ்வகர்மா இந்த நகரை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.

இது கடலுக்கடியில் மூழ்கியுள்ளது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அதன் சில பகுதிகளை மீட்டுள்ளனர். ஆழ்கடலில் நீச்சலடித்து சென்று அதை பார்க்க முடியும்.

இந்தப் பயணத்துக்குப் பின், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'நீரில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீக அனுபவம். ஆன்மிக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தியின் ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்' என, அவர் குறிப்பிட்டார்.

மகிழ்ச்சி

துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் அவர் வழிபட்டார். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், தன் அனுபவத்தை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

பண்டைய துவாரகாவில் வழிபட்டது ஒரு தெய்வீக அனுபவமாகும். இது ஒரு தைரியமான முயற்சி என்பதை விட, நம்பிக்கையைச் சார்ந்தது.

அங்கு இருந்தபோது, அந்த பண்டைய நகரைத் தொட்டபோது, 21ம் நுாற்றாண்டில், இந்தியாவின் பிரமாண்ட வளர்ச்சி என் கண் முன்னே வந்து சென்றது. கடலுக்கடியில் இருந்தபோது, நம் நாட்டை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற உறுதி மேலும் வலுபட்டுள்ளது.

இந்த புனித நகரை பார்க்க வேண்டும்; அதை தொட வேண்டும் என்ற என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

போதையை ஒழிப்போம்!

கீதா பரிவார் அமைப்பின் சார்பின் அசுவமேத யாகம் என்ற, இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:குடும்பம் என்ற அமைப்பு வலுவிழக்கும்போது, நல்லொழுக்கம் பாதிக்கப்படுகிறது. இது, ஒட்டுமொத்தமாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும். குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். தங்களுடைய பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பல பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.போதைப் பொருள் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும். இந்தத் தீமையில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க, குடும்ப அமைப்பு வலுவாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.



சுதர்ஷன் பாலம் திறப்பு!

குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள ஓகாவையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும், 2.32 கி.மீ., துார பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.சுதர்ஷன் சேது என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலம், நாட்டிலேயே மிக நீளமான, இரும்புக் கம்பிகளால் இணைக்கப்பட்ட கேபிள் பாலமாகும். மொத்தம், 979 கோடி ரூபாய் செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. நான்கு வழி பாதைகளுடன், மக்கள் நடந்து செல்வதற்கான தனி பாதையும் உள்ளது.பேட் துவாரகா தீவானது, ஓகா துறைமுகத்தில் இருந்து, 30 கி.மீ.,யில் உள்ளது. இங்கு, புகழ்பெற்ற கிருஷ்ணரின் துவாரகதீஷ் கோவில் உள்ளது. வழக்கமாக இதற்கு படகு வாயிலாகவே செல்ல முடியும். அதனால், பகலில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் வாகனங்கள் வாயிலாக பக்தர்கள் செல்ல முடியும்.








      Dinamalar
      Follow us