ADDED : செப் 18, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமருக்கு கிடைத்த 660 வகையான பரிசுப்பொருட்கள் ஏலம் ஆன்லைன் வாயிலாக துவங்குகிறது.
பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்படும் பொருட்கள் ஏலம் விடப்படும் முறை கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 முறை ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கம் நிதி மக்கள் நிலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்தாண்டு 6-வது முறையாக பிரதமர் மோடிக்கு கிடைத்த 600 வகையான பரிசு பொருட்கள் ஏலம் விடும் பணி ஆன்லைன் மூலம் துவங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பங்கேற்று பொருட்களை ஏலத்திற்கு வாங்க விரும்புவோர் https://pmmementos.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் பெயர் குறித்த விவரத்தை பதிவு செய்யாலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.