13-ம் தேதி வாரணாசியில் மோடி வேட்பு மனு :‛‛ரோடுஷோ'' நடத்தவும் பா.ஜ., ஏற்பாடு
13-ம் தேதி வாரணாசியில் மோடி வேட்பு மனு :‛‛ரோடுஷோ'' நடத்தவும் பா.ஜ., ஏற்பாடு
UPDATED : மே 03, 2024 07:43 PM
ADDED : மே 03, 2024 07:32 PM

வாரணாசி: வாரணாசி தொகுதியில் வரும் 13-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி. ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் கடந்த ஏப். 19, மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. வரும் 7-ம் தேதி 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் உபி. மாநிலம் வாரணாசி தொகுதி தற்போதைய லோக்சபா எம்.பி.யான பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் மெகா ‛‛ரோடுஷோ'' நடத்தவும் பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வாரணாசி தொகுதிக்கு இறுதி கட்டமான ஏழாம் கட்டமாக 8 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு ஜூன் 01-ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜெய் ராய் என்பவர் களம் இறங்குகிறார்.