மோடியின் உத்தரவாதம்:வளர்ந்த இந்தியா 2047: பா.ஜ. தேர்தல் அறிக்கை வெளியாகிறது
மோடியின் உத்தரவாதம்:வளர்ந்த இந்தியா 2047: பா.ஜ. தேர்தல் அறிக்கை வெளியாகிறது
UPDATED : ஏப் 13, 2024 10:00 PM
ADDED : ஏப் 13, 2024 09:53 PM

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலுக்கான பா.ஜவின் தேர்தல்அறிக்கையை நாளை (14-ம் தேதி) வெளியிடுகிறார் பிரதமர்
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள பொது தேர்தலின் முதற்கட்ட தேர்தல் வரும் 19 ம் தேதி துவங்குகிறது. தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சியான காங்., உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது.இந்நிலையில் பா,ஜ., மட்டும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக பா.ஜ.வின் தேர்தல் அறிக்கை மீது மக்களிடையே எதிர்பார்ப்பு மேலோங்கியது.
காங்., வெளியிட்ட நியா பத்ரா என்ற பெயரில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை முஸ்லிம்களின் கொள்கைகளை உள்ளடக்கி இருப்பதாக பிரதமர் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளன்று (14-ம் தேதி ) கட்சி அலுவலகத்தில் வைத்து வெளியிடுகிறார் பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தேர்தல் அறிக்கையின் கருப்பொருளாக மோடியின் உத்தரவாதம்: வளர்ந்த இந்தியா 2047 என்பதாகும்.
வளமான இந்தியா, பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் இடையே நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்ற கட்சி உறுதியளிக்கிறது.மேலும் ராமர் கோவில் கட்டுமானம், 370வது சட்டப்பிரிவு ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தேர்தல் அறிக்கையில் கட்சியின் கலாச்சார நிகழ்ச்சி மீது கவனம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் நாடுமுழுவதும் வேன்கள் மற்றும் சமூக ஊடக பிரசாரங்கள்மூலம் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து இரண்டு தடவைக்கும் மேல் குழு கூடி விவாதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

