ADDED : ஏப் 24, 2025 11:14 PM
கல்காஜி: டெலிவரி செய்பவரை போல் வீட்டுக்குள் நுழைந்து, வயதான தம்பதியை கட்டிப்போட்டு, பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 20ம் தேதி கல்காஜியில் நேரு அடுக்குமாடி குடியிருப்பில் வயதான தம்பதி வசிக்கும் ஒரு வீட்டுக்குள் டெலிவரி பாய் என்று கூறிக்கொண்டு ஒரு இளைஞர் நுழைந்தார்.
வீட்டுக்குள் நுழைந்ததும் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்ட அவர், கத்தி, துப்பாக்கியை காட்டி தம்பதியை மிரட்டியுள்ளார். அவர்களை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 18,000 ரூபாய், தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். பின், மதன்பூர் காதரில் வசிக்கும் ஆஷிஷை, 35, போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் வயதான தம்பதியை மிரட்ட போலி துப்பாக்கியை பயன்படுத்தியதும் நீண்ட நாட்களாக அவர்களை கண்காணித்து வந்ததும் தெரிய வந்தது.