காசு மேலே காசு வந்து…கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு
காசு மேலே காசு வந்து…கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : செப் 17, 2024 03:13 PM

புதுடில்லி: ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த சென்ட்ரம் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிதி சார்ந்த அமைப்பு கோடீஸ்வரர்கள் சம்பளம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதன் முடிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது:ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்போது 31,800 பேர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர்.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.38 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளனர்.
ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் 58,200 பேர் சம்பாதிக்கின்றனர். இது 49 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வகையினர் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளனர்.
அதேபோல், 10 கோடி பேர் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கின்றனர். இது கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த வகையினர், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.49 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.